search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ரூ. 2 கோடி பட்ஜெட்டில் பிஎம்டபிள்யூ XM இந்தியாவில் அறிமுகம்
    X

    ரூ. 2 கோடி பட்ஜெட்டில் பிஎம்டபிள்யூ XM இந்தியாவில் அறிமுகம்

    • இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சக்திவாய்ந்த கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • முன்னதாக 2021 வாக்கில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட கார் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய XM கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ XM விலை ரூ. 2 கோடியே 60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிஎம்டபிள்யூ M பிரிவில் இரண்டாவது பி-ஸ்போக் மாடலாக புதிய பிஎம்டபிள்யூ XM அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய XM மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் துவங்குகிறது.

    புதிய பிஎம்டபிள்யூ XM மாடலில் M ஹைப்ரிட் டிரைவ் மற்றும் 4.4 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின், கியர்பாக்ஸ் மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 644 ஹெச்பி பவர், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சக்திவாய்ந்த கார் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.3 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. XM மாடலில் உள்ள ஆல் எலெக்ட்ரிக் டிரைவிங் மூலம் 88 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். புதிய பிஎம்டபிள்யூ XM மாடலில் 5-லிண்க் ரியர் சஸ்பென்ஷன் செட்டப், M டேம்ப்பர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் 48 வோல்ட் ஆக்டிவ் ரோல் ஸ்டேபிலைசேஷன் வழங்கப்பட்டுள்ளது.

    பிஎம்டபிள்யூ XM மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள், பிஎம்டபிள்யூ பாரம்பரிய கிட்னி கிரில், ப்ககவாட்டில் ரெசிடிங் விண்டோ லைன், சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள் உள்ளன. ஃபுல் சைஸ் X7 மாடலை விட புதிய XM அளவில் சற்று சிறியதாகவே இருக்கிறது. புதிய XM மாடல் 5-சீட்டர் வடிவில் மட்டுமே கிடைக்கிறது.

    Next Story
    ×