search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    அதிக சக்திவாய்ந்த லம்போர்கினி உருஸ் மாடல் அறிமுகம்
    X

    அதிக சக்திவாய்ந்த லம்போர்கினி உருஸ் மாடல் அறிமுகம்

    • லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் S மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    • புதிய உருஸ் S மாடலில் செயல்திறனுடன், ஆடம்பர வசதிகள் ஏராளமாக வழங்கப்பட்டுள்ளன.

    லம்போர்கினி நிறுவனம் உருஸ் சீரிசில் புது மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லம்போர்கினி கார் உருஸ் S என அழைக்கப்படுகிறது. புதிய லம்போர்கினி உருஸ் S மாடலில் அதிக ஆடம்பர அம்சங்கள் மற்றும் கஸ்டமைசேஷன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இண்டீரியரை பொருத்தவரை புதிய உருஸ் S மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை.

    எனினும், இந்த காரில் ஆடம்பரத்திற்கு அதிக முக்கியத்தும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த காரின் இண்டீரியர் அம்சங்கள் வித்தியாசமான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய உருஸ் S மாடலில் 4.0 லிட்டர், ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 666 ஹெச்பி பவர் மற்றும் 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். போக்ஸ்வேகன் குழுமத்தின் மிகவும் சக்திவாய்ந்த வி8 என்ஜின் என்ற பெருமையை இந்த மாடலும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

    புதிய லம்போர்கினி உருஸ் S மாடல்- சபியா, நீவ் மற்றும் டெர்ரா என மூன்று வித ஆஃப் ரோட் ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்டிரீட், ஸ்போர்ட் மற்றும் டிராக் போன்ற டிரைவிங் மோட்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரின் வினியோகம் ஆண்டு இறுதியில் துவங்க இருக்கிறது. சமீபத்தில் தான் லம்போர்கினி நிறுவனம் தனது 200-ஆவது எஸ்யுவியை இந்தியாவில் வினியோகம் செய்தி இருந்தது.

    Next Story
    ×