search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    சக்திவாய்ந்த எஞ்சின், சீறிப்பாய செய்யும் பவர்.. புது பிஎம்டபிள்யூ கார் அறிமுகம்
    X

    சக்திவாய்ந்த எஞ்சின், சீறிப்பாய செய்யும் பவர்.. புது பிஎம்டபிள்யூ கார் அறிமுகம்

    • பிஎம்டபிள்யூ கார் நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த காரில் 3.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மோட்டார் உள்ளது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய M2 மாடலை அறிமுகம் செய்தது. புதிய பிஎம்டபிள்யூ M2 விலை ரூ. 1.03 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேம்பட்ட புதிய பிஎம்டபிள்யூ கார் நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய பிஎம்டபிள்யூ M2 மாடலில் 3.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், ஆப்ஷனல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் மூலம் புது M2 மாடல் 486 ஹெச்பி பவர், 600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4 நொடிகளுக்குள் எட்டிவிடும். எனினும், காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர்களாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. M டிரைவர் பேக்கேஜ் பெறும் போது இந்த காரின் வேகத்தை மணிக்கு 285 கிலோமீட்டர்கள் வரை நீட்டித்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

    அப்டேட் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ M2 மாடல் தற்போது- போர்டிமௌ புளூ, ஃபயர் ரெட், சௌ பாலோ எல்லோ மற்றும் ஸ்கை-ஸ்கிராப்பர் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    Next Story
    ×