search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் வெலார் - இந்திய முன்பதிவு துவக்கம்!
    X

    முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் வெலார் - இந்திய முன்பதிவு துவக்கம்!

    • புதிய வெலார் மாடலின் வெளிப்புறம் ரிவைஸ்டு கிரில், பிக்சல் எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளன.
    • புதிய வெலார் மாடலிலும் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    ரேன்ஜ் ரோவர் வெலார் மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஆடம்பர எஸ்யுவி மாடல் ஒற்றை டாப் என்ட், டைனமிக் HSE வேரியன்டில் கிடைக்கிறது. இத்துடன் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இந்த காரின் வினியோகம் செப்டம்பர் மாதம் துவங்க இருக்கிறது.

    புதிய வெலார் மாடலின் வெளிப்புறம் ரிவைஸ்டு கிரில், பிக்சல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கார் சடார் கிரே, வெரிசைன் புளூ, சன்டோரினி பிளாக் மற்றும் ஃபுஜி வைட் என நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. இவற்றை டூயல் டோன் ரூஃப் நிறங்களில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

    உள்புறம் புதிய வெலார் மாடலில் லேன்ட் ரோவர் நிறுவனத்தின் பிவி ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இந்த அம்சத்தை பெறும் முதல் லேன்ட் ரோவர் கார் இது ஆகும். இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, வயர்லெஸ் சார்ஜர், ஏர் பியூரிஃபயர், ஆக்டிவ் ரோட் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பவர்டிரெயினை பொருத்தவரை புதிய வெலார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் பெட்ரோல் மோட்டார் 296 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 201 ஹெச்பி பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இரு என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் டெரைன் ரெஸ்பான்ஸ் 2 சிஸ்டம் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×