search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    இந்திய வெளியீட்டுக்கு தயாராகும் ஜீப் எலெக்ட்ரிக் கார் - எந்த மாடல் தெரியுமா?
    X

    கோப்புப்படம்

    இந்திய வெளியீட்டுக்கு தயாராகும் ஜீப் எலெக்ட்ரிக் கார் - எந்த மாடல் தெரியுமா?

    • இந்த கார் J4U எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது.
    • முழுமையான எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும் என தகவல்.

    அடுத்த தலைமுறை ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் 2026-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த மாடல் J4U எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது.

    ஜீப் பிரான்டின் தாய் நிறுவனமான ஸ்டெலான்டிஸ் STLA M பிளாட்ஃபார்ம்-ஐ தழுவி புதிய காம்பஸ் மாடல் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்ம் ஐ.சி. என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் என பலவிதங்களில் பயன்படுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஜீப் காம்பஸ் மாடல் முழுமையான எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    கோப்புப்படம்


    கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட STLA மீடியம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக் மாடலை கருத்தில் கொண்டே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதில் பெட்ரோல், டீசல் பவர்டிரெயின் ஆப்ஷன்களுக்கு ஏற்ற வகையிலும் பயன்படுத்தப்படலாம் என தெரிகிறது. இது முன்புறம் மற்றும் 4-வீல் டிரைவ் ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.

    இந்த காரில் அதிகபட்சம் 98 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என்றும் இதன் பெர்ஃபார்மன்ஸ் பேக் முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என WLTP சான்று பெற்று இருக்கிறது.

    Next Story
    ×