search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்
    X

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

    • ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதிய ஸ்பெக்டர் மாடல் மூலம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் களமிறங்கி இருக்கிறது.
    • புதிய ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார் இரண்டு கதவுகள் மற்றும் நான்கு சீட்களை கொண்டிருக்கிறது.

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்பெக்டர் மாடல் மூலம் எலெக்ட்ரிக் வாகன பயணத்தை துவங்கி உள்ளது. புதிய ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் மாடல் இரண்டு கதவுகள் மற்றும் நான்கு இருக்கைகளை கொண்டுள்ளது.

    புதிய ஸ்பெக்டர் மாடல் பாரம்பரியம் மிக்க பேண்டம் கூப் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய அலுமினியம் ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்பெக்டர் மாடலின் பேட்டரிகள், வழக்கமான ரோல்ஸ் ராய்ஸ் மாடலை விட 30 சதவீதம் உறுதியானதாக மாற்றி இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் வழக்கப்படி ஸ்பெக்டர் மாடல் 700 கிலோ சவுண்ட் டெடனிங் பயன்படுத்துகிறது. இது காரின் தேவையற்ற சத்தத்தை காரினுள் கேட்க விடாமல் தடுக்கும்.

    இந்த எலெக்ட்ரிக் காரின் முழுமையான அம்சங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த காரின் இறுதிக்கட்ட சோதனைகள் அடுத்த ஆண்டு வரை தொடர்ச்சியாக நடைபெற இருக்கிறது. புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் 430 கிலோவாட் திறன் மற்றும் 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். முழு சார்ஜ் செய்தால் இந்த கார் 520 கிலோமீட்டர் வரை செல்லும். அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடலின் விற்பனை சர்வதேச சந்தையில் 2024 வாக்கில் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து இந்திய விற்பனை துவங்கும்.

    Next Story
    ×