search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    70-வது தேசிய விருது: சிறந்த நடிகர் ரிஷப் ஷெட்டி, சிறந்த படம் காந்தாரா
    X

    70-வது தேசிய விருது: சிறந்த நடிகர் ரிஷப் ஷெட்டி, சிறந்த படம் காந்தாரா

    • சிறந்த இயக்குனராக சூரஜ் ஆர் பர்ஜாத்யா (உஞ்சாய்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • சிறந்த இசையமைப்பாளராக பிரிட்டம் (Brahmastra) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    70-வது தேசிய பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2022-ல் சினிமாத்துறையில் சிறந்து விளங்கிய படங்கள், நடிகர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டன.

    கன்னட திரைப்படமான காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை இயக்கியவரும் ரிஷப் ஷெட்டிதான். மேலும் இந்த படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    சிறந்த நடிகர்: ரிஷப் ஷெட்டி (காந்தாரா)

    சிறந்த நடிகை: நித்யா மேனன் மற்றும் மானசி பரேக்

    சிறந்த துணை நடிகை: நீனா குப்தா (உஞ்சாய்)

    சிறந்த பின்னணி பாடகர்: அரிஜித் சிங் (பிரம்மாஸ்திரா) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சிறந்த இசையமைப்பாளர்: பிரிட்டம் (பிரம்மாஸ்திரா)

    சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன்-1)

    சிறந்த இயக்குனர்: சூரஜ் ஆர் பர்ஜாத்யா (உஞ்சாய்)

    சிறந்த படம்: ஆட்டம் (Feature Film), பிரம்மாஸ்திரா (சிறந்த விஎஃப்எக்ஸ்), காந்தாரா (முழுக்க முழுக்க பொழுபோக்கு)

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×