search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    A Star was Born - பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்து தெரிவித்த `டிராகன் படக்குழு
    X

    A Star was Born - பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்து தெரிவித்த `டிராகன்' படக்குழு

    • ஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார்.
    • இது ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 26 - வது படமாகும்.

    கடந்த 2020 - ஆண்டு பிப் -14 ந்தேதி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'ஓ மை கடவுளே' காதல் நகைச்சுவை படம் வெளியாகி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இது ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 26 - வது படமாகும்.

    இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கியது. இந்த புதிய படத்திற்கு 'டிராகன்' என "டைட்டில்" வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், வி.ஜே. சித்து , ஹர்ஷத் ஆகியோர் நடிக்கின்றனர்.

    பிரதீப் ரங்கனாதனும் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதீப் ரங்கனாதனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் `ஒருவன் என்று தான் ஒரு உச்சத்தை தொட முடியும் என நம்புகிறானோ அப்பொழுது தான் ஒரு ஸ்டார் பிறக்கிறான்" என்று எழுதியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×