search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சைஃப் அலி கான் வழக்கில் திருப்பம்.. கைரேகையால் கன்பியூஸ் ஆகி நிற்கும் மும்பை போலீஸ்
    X

    சைஃப் அலி கான் வழக்கில் திருப்பம்.. கைரேகையால் கன்பியூஸ் ஆகி நிற்கும் மும்பை போலீஸ்

    • தனது தாயின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் அவ்வாறு செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீஸ் தெரிவித்தது.
    • 19 கைரேகைகள் எதனுடனும் கைது செய்யப்பட்ட முகமதின் கைரேகை பொருந்தவில்லை என்று தெரியவந்துள்ளது.

    பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் தனது வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்தி குத்தில் காயமடைந்த சைஃப் அலி கான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சைஃப் அலி கான் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

    மறுபக்கம், சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் என்று முகமது ஷரிபுல் என்ற நபர் கைது செய்யப்பட்டார். அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று போலீசார் கூறினர். மேலும் தனது தாயின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் அவ்வாறு செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீஸ் தெரிவித்தது.

    ஆனால் கைது செய்யப்பட்டவரின் தந்தை, சிசிடிவியில் இருப்பது தனது மகன் இல்லை என்றும் அவரை தவறாக இந்த வழக்கில் இணைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில் சைஃப் அலி கான் வீட்டில் சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகள் எதனுடனும் கைது செய்யப்பட்ட முகமதின் கைரேகை பொருந்தவில்லை என்று தெரியவந்துள்ளது.

    மாநில குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) வசம் இருந்த கைரேகையோடு தற்போது கைது செய்யப்பட்டவரின் கைரேகை ஒப்பிட்டு பார்க்கப்பட்ட நிலையில் எதனுடனும் அவரின் கை ரேகை பொருந்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூடுதல் மாதிரிகளை மீண்டும் ஒருமுறை சோதனைக்கு அனுப்ப மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×