search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    புதுப்பட ரிலீஸ் - பொற்கோவிலில் வழிபட்ட விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா
    X

    புதுப்பட ரிலீஸ் - பொற்கோவிலில் வழிபட்ட விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா

    • இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.
    • புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    லூக்கா சுப்பி, மிமி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் லக்ஷ்மண் உதேக்கர், 'சாவா' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜி மகராஜ் - சாயிபாய் தம்பதியரின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

    சத்ரபதி சாம்பாஜி கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார். சாம்பாஜியின் மனைவி யேசுபாய் போஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே டிரெய்லரில் , மகாராஷ்டிராவின் பாரம்பரிய இசைக்கருவியான "லெசிம்" உடன் விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடனமாடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இது அரசியல் ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மகாராஷ்டிரா அமைச்சர் உதய் சமந்த், ' சாவா ' படத்தில் நடனக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். படத்தில் சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நடனம் ஆடுவதைக் காட்டுகிறது. இயக்குநர் இந்தப் பகுதியை நீக்க வேண்டும்.



    படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய, வெளியிடுவதற்கு முன்பு வரலாற்று ஆய்வாளர்களுக்குக் காட்ட வேண்டும், முழு படத்தையும் பார்த்த பின்பே படத்தை வெளியிட அனுமதிக்கப்படும்.

    இல்லாவிட்டால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார். இதனையடுத்து சர்ச்சைக்குரிய நடன காட்சிகளை நீக்குவதாகப் படக்குழு உறுதி அளித்தது. இதனை தொடர்ந்து இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.



    இந்த நிலையில் 'சாவா' படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் நடிகர் விக்கி கௌஷல், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் வழிபாடு செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×