என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![ஷீரடி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ராஷ்மிகா மந்தனா ஷீரடி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ராஷ்மிகா மந்தனா](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9256536-rashmika.webp)
ஷீரடி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ராஷ்மிகா மந்தனா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இப்படம் நாளை வெளியாக உள்ளது.
- புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
லூக்கா சுப்பி, மிமி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் லக்ஷ்மண் உதேக்கர், 'சாவா' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜி மகராஜ் - சாயிபாய் தம்பதியரின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.
சத்ரபதி சாம்பாஜி கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார். சாம்பாஜியின் மனைவி யேசுபாய் போஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் நாளை வெளியாக உள்ளது.
இந்த நிலையில் 'சாவா' படம் வெளியாவதையொட்டி ஷீரடி சாய்பாபா கோவிலில் படக்குழுவினருடன் ராஷ்மிகா மந்தனா, விக்கி கௌஷல் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் நடிகர் விக்கி கௌஷல், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.