என் மலர்
சினிமா செய்திகள்

பாலா எப்பவும் ஹீரோதான் - வணங்கான் இசை வெளியீட்டு விழாவில் மணி ரத்னம்
- பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான்.
- படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இதே விழாவில் இயக்குனர் பாலாவின் திரையுலக பயணம் 25 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடினர். இந்த விழாவில் திரைத்துறையை சேர்ந்த பலரும் கலந்துக்கொண்டனர்.
விழாவில் பேசியிருக்கும் இயக்குனர் மணி ரத்னம், "அவருடைய `சேது' படத்தை நான் மிஸ் பண்ணிட்டேன். 'நந்தா' திரைப்படத்தைத்தான் தியேட்டர்ல பார்த்தேன். எல்லா கலையிலையும் நேர்த்தி இருந்தது. அவர் அன்னைக்கு எப்படி இருந்தாரோ, அதே மாதிரிதான்... ஹீரோதான் இப்போதும். பாலா கிட்ட 'ரொம்ப மெதுவாக படம் பண்றீங்க'ன்னுதான் சொல்வேன். நிறைய படங்கள் தமிழ் சினிமாவை கீழ கொண்டு போகுது. நீங்க வந்து படம் பண்ணனும்" என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






