search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ராம்சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம்
    X

    வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ராம்சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

    • ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் பங்கேற்கிறார்.
    • பட்டமளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, வருகிற 13-ந்தேதி நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் பங்கேற்கிறார்.

    இந்த விழாவில், நடிகர் ராம்சரண் கலை சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த விருதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் டி.ஜி.சீத்தாராம் வழங்குகிறார். பட்டமளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

    தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் 'ரங்கஸ்தலம்', 'தூபான்', 'துருவா', 'ஆச்சார்யா' போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் நடித்த 'ஆர்.ஆர்.ஆர்.' படம் இவருக்கு பான் இந்தியா ஸ்டார் அந்தஸ்த்தையும் வழங்கியது. அந்த படத்தில் இவரது நடிப்பும், நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    ராம்சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராம்சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் 'கேம் சேஞ்சர்' என்ற படத்தில் நடிக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×