search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மீண்டும் ரசிகர்களை கொள்ளை கொள்ள வரும் தாம் தூம்
    X

    மீண்டும் ரசிகர்களை கொள்ளை கொள்ள வரும் தாம் தூம்

    • தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி.
    • 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான தாம் தூம் சூப்பர் ஹிட்டானது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜெயம் ரவியின் பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி இருக்கிறது. அந்த வகையில் 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான தாம் தூம் சூப்பர் ஹிட்டானது.

    இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கங்கனா ரனாவத் நடித்திருந்தார். மேலும், ராய் லட்சுமி, ஜெயராம், ஶ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆக்ஷன் மற்றும் ரொமாண்டிக் கலந்த இந்த படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் பரவி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கி இருந்தார்.

    16 ஆண்டுகளுக்குப் பிறகு தாம் தூம் திரைப்படம் திரையில் வெளியாக இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட திரையரங்கில் ஜனவரி 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    ஜெயம் ரவி தற்பொழுது காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25 -வது திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×