search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    எமோஷனல் கவிதையுடன் நன்றி தெரிவித்த இயக்குநர் இளன்
    X

    எமோஷனல் கவிதையுடன் நன்றி தெரிவித்த இயக்குநர் இளன்

    • இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • இப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. இப்படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    இப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி சில நாட்களே ஆன நிலையில் பல திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

    ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்த ஒருவன் சினிமாவில் நடிகனாக ஆசைப்படுகிறான். அவன் படும் கஷ்டங்கள், போராட்டத்தை பற்றி பேசக் கூடிய படமாக இது அமைந்துள்ளது.

    இந்நிலையில், படத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் இளன் கவிதை எழுதியுள்ளார். அதில்,

    முதல் நாள் காட்சியில், முகம் அறியா சகோதரன் ஒருவன் ஓடி வந்து கேட்டான் : உங்களை கட்டி புடிச்சுக்கலாமா? அந்த இரு கணம் அன்பு மட்டுமே வெளிப்பட்டது.

    திரையரங்கை சுத்தம் செய்யும் பணி பெண், கன்னத்தை பிடித்து சுத்திப்போட்டது என் தாயின் அன்பை வெளிப்படுத்தியது. பல இடங்களில் கைதட்டலும், கரகோஷமும் "லவ் யூ" என்று சொல்வதாகவே தோன்றியது.

    இறுதிக்காட்சியின் வரவேற்பு என்னுள் உள்ள எழுத்தாளனை இன்னும் தைரியசாலியாக மாற்றியுள்ளது. ரோலிங் கிரெடிட்ஸ் போட்டவுடன் எழுந்து செல்வதே வழக்கம். ஆனால், நான் கண்டதோ காதலியை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாத காதலர்களைதான். ஒரு சில (பல) விமர்சனங்கள், நான் ஒரு கலைஞனாய் மெருகேற உதவுகிறது.

    நம்பிக்கைக்கு நன்றி. கூட்டம் அலைமோதுகிறது. பகலிலும், மதியத்திலும், இரவிலும் சிலரின் கனவிலும் ஸ்டார் ஒளிர்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×