search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மகா கும்பமேளாவில் துறவறம்  பூண்டார் பிரபல 90ஸ் பாலிவுட் நடிகை!
    X

    மகா கும்பமேளாவில் துறவறம் பூண்டார் பிரபல 90ஸ் பாலிவுட் நடிகை!

    • போதைப்பொருள் கடத்தல் கடத்தல் புள்ளி விக்கி கோஸ்வாமியுடன் மம்தா உறவில் இருந்தார்.
    • 25 ஆண்டுகளாக வெளிநாடுகளையே சுற்றிய மம்தா குல்கர்னி [52 வயது] சமீபத்தில் மீண்டும் இந்தியா திரும்பினார்.

    80, 90 களில் ராம் லகான், வக்த் ஹமாரா ஹை, கிராந்திவீர், கரண் அர்ஜுன், சப்சே படா கிலாடி, அந்தோலன் மற்றும் பாஸி போன்ற பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்களில் நடித்த நடிகை மம்தா குல்கர்னி. மாடல் அழகியாகவும் இருந்த மம்தா 2002 ஆம் ஆண்டோடு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

    சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 1997 ஆம் ஆண்டு துபாய் நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைபட்ட விக்கி கோஸ்வாமியுடன் மம்தா உறவில் இருந்தார்.

    மம்தா அவரை அடிக்கடி சிறைக்கு சென்று பார்ப்பதாகவும், அவர் சிறையில் இருந்தபோதே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    25 ஆண்டுகளாக வெளிநாடுகளையே சுற்றிய மம்தா குல்கர்னி [52 வயது] சமீபத்தில் மீண்டும் இந்தியா திரும்பினார். விக்கி கோஸ்வாமியுடன் தனக்கு நடந்த திருமணத்தையும் பேட்டியில் அவர் மறுத்தார். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் பிராயகராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் காவி உடுத்தி துறவறம் பூண்டுள்ளார்.

    இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்திலும் அவர் அவ்வப்போது பதிவுகளையும் இட்டு வந்த மம்தா, தனது துறவற முடிவை அறிவித்திருந்தார். இதன்படி நேற்று முன்தினம் மகா கும்பமேளாவின் செக்டர் 16-ல் உள்ள கின்னர் அகாடா மடத்துக்கு வந்தார்.

    அதன் தலைவரான ஆச்சார்யா டாக்டர் லஷ்மி நாராயண் திரிபாதியிடம் தனது முடிவு குறித்து எடுத்துரைத்தார். தனக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கும்படியும், முழுத்துறவறம் மேற்கொள்ளத் தயார் எனவும் அதற்கான நிபந்தனைகளை ஏற்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.

    இதற்காக மம்தா, இறந்தபின் அவர்களது குடும்பத்தார் செய்யும் பிண்டதானச் சடங்கை அவர் தனக்குத் தானே செய்து கொண்டார். தொடர்ந்து அவர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பின் முறைப்படி அவருக்கு மகா மண்டலேஷ்வர் பதவியை அளிக்கும் சடங்குகளை கின்னர் அகாடாவினர் செய்தனர். அவரது பெயர் அகாரா என மாற்றப்பட்டது.

    ருத்ராச்ச மாலைகள், காவி உடை சகிதமாக மம்தா குல்கர்னி பேசியதாவது, எனக்கு காளி மாதா இட்ட கட்டளையின்படி எனது புதிய குருவாக கின்னர் அகாடாவின் தலைவர் லஷ்மி நாராயண் திரிபாதியை ஏற்றுள்ளேன்.

    எனது ரசிகர்கள் என்னை பாலிவுட்டுக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்துகின்றனர். மகா காளி உத்தரவின்றி இனி எதுவும் நிகழாது என்று தெரிவித்துள்ளார். கின்னர் அகாடாவின் மதுரா முகாமில் தங்கி இந்துமதத்தை வளர்க்க மம்தா பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×