என் மலர்
சினிமா செய்திகள்
`குட் பேட் அக்லி' உடன் மோதும் `இட்லி கடை'
- ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி'.
- ஏப்ரல் 10 ஆம் தேதி தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் வெளியாகவுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், 'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அதே ஏப்ரல் 10 ஆம் தேதி தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் வெளியாகவுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும்.இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நித்யா மேனன், ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஒரே நாளில் தனுஷ் மற்றும் அஜித்தின் திரைப்படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மிக உற்சாகத்தில் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்