search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    புற்றுநோயில் இருந்து மீண்டேன்.. கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் வீடியோ வெளியிட்டு உருக்கம்
    X

    புற்றுநோயில் இருந்து மீண்டேன்.. கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் வீடியோ வெளியிட்டு உருக்கம்

    • புற்றுநோயில் இருந்து விடுபட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்
    • உங்கள் அனைவரிடமும் பேசும்போது உணர்ச்சிவசப்படுவேன் என்பதால் சற்று பதற்றமாக உள்ளது.

    ஜெயிலர் படம் மூலம் பிரபல கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து சிவராஜ்குமார் சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்காவிற்குக் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி புறப்பட்டு சென்றார்.

    இந்நிலையில் மூலம் சிவராஜ் குமாரின் அறுவை சிகிச்சை புற்றுநோய் பாதித்த பித்தப்பை அகற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் (எம்சிஐ) பித்தப்பை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு அவர் புற்றுநோயில் இருந்து விடுபட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

    முன்னதாக அந்த வீடியோவில், சிவாண்ணா உடல் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நான் என்றென்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என அவரது மனைவி கீதா சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து அந்த வீடியோவில் பேசிய சிவராஜ் குமார், உங்கள் அனைவரிடமும் பேசும்போது உணர்ச்சிவசப்படுவேன் என்பதால் சற்று பதற்றமாக உள்ளது.

    உங்கள் அனைவரையும் அறுவை சிகிச்சைக்காக விட்டுச் செல்லும் போது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். நான் பெங்களூரில் இருந்தபோதும், இங்கு [ மியாமியில்] இருந்தபோதும், கீதா, என் மகள் நிவேதிதா, என் மைத்துனர் மது, என் மருமகன், எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உட்பட எனது ரசிகர்கள், சக ஊழியர்கள் மற்றும் அன்பானவர்கள் அனைவரின் பிரார்த்தனையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளத் தேவையான வலிமையைப் பெற்றேன் என்று தெரிவித்தார்.

    மேலும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த அவர், நான் இரட்டிப்பு ஆற்றல், நடனம், சக்தி மற்றும் ஸ்வாக் ஆகியவற்றுடன் மீண்டும் வருவேன் என்று தெரிவித்தார்.

    கடைசியாக சிவராஜ் குமார் நடிப்பில் பைரதி ரணகல் மற்றும் கேப்டன் மில்லர் படங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×