search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்திய பெண்கள் ஆதிக்கமும் அடிபணிதலும் சேர்ந்த  வினோத கலவை - ஆஸ்கர் படத் தேர்வில் சர்ச்சை
    X

    இந்திய பெண்கள் ஆதிக்கமும் அடிபணிதலும் சேர்ந்த வினோத கலவை - ஆஸ்கர் படத் தேர்வில் சர்ச்சை

    • இந்த படத்தை ஆஸ்கருக்கு தேர்வு செய்த 13 பேர் கொண்ட குழுவில் அனைவருமே ஆண்கள் ஆவர்
    • ChatGpt ஏஐ மூலம் எழுதியிருப்பார்கள் என்றும் சிலர் கிட்ணலடித்துள்ளனர்

    இந்த வருட ஆஸ்கர் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படம் லாபட்டா லேடிஸ். புதிதாகத் திருமணமான ஜோடிகளில் மணப்பெண்கள் தவறுதலாக இடம்மாறுவதால் ஏற்படும் குழப்பங்களைச் சுற்றி நடக்கும் கதை இது. கடந்த மார்ச் 1 ஆம் தேதி வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் இந்த படம் திரையிடப்பட்டது.

    இந்த படத்தை தயாரித்தவர்களுள் பாலிவுட் நடிகர் அமீர் கானும் ஒருவர். இந்திய திரைப்பட கூட்டமைப்பு (FFI) ஆஸ்கருக்கு அனுப்ப தேர்வு செய்து தயாரித்துள்ள அதிகாரப்பூர்வ ஆவணத்தில் முதல் வரியில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியம் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    அதாவது, "இந்திய பெண்கள் ஆதிக்கமும் அடிபணுவும் கலந்த வினோதமான கலவை" ["strange mix of submission and dominance"]என்ற வரியுடன் அந்த ஆவணம் தொடங்குகிறது. இதை பிரதிபலிப்பதாலேயே இந்த படம் ஆஸ்கருக்கு தேர்வு செய்து அனுப்பியுள்ளோம் என்ற அர்த்தத்தில் அது குறிப்பிடப்பட்டுள்ளதால் இணையவாசிகள் அதைக் குறித்து தீவிர விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த படத்தை ஆஸ்கருக்கு தேர்வு செய்த 13 பேர் கொண்ட குழுவில் அனைவருமே ஆண்கள் என்பதால் அவர்களின் மனப்பான்மை இதில் வெளிப்பட்டுள்ளது என்று கூறி வருகின்றனர். இந்த ஆவணத்தை ChatGpt ஏஐ மூலம் எழுதியிருப்பார்கள் என்றும் சிலர் கிட்ணலடித்துள்ளனர். இந்த படத்தில் பெண்கள் வீட்டு வேலையை செய்து கொண்டு இல்லத்தரசியாக இருக்கவும் விரும்புவர் அதே வேலையில் அதற்கு நேர்மாறாகவும் இருக்க விரும்புவர் என்ற கருத்தியல் இடம்பெற்றிருப்பதால் குழு உறுப்பினர்கள் அவ்வாறு எழுதியுள்ளதாகவும் சிலர் நியாயப்படுத்தி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×