search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை  - வாணி போஜன்
    X

    ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை - வாணி போஜன்

    • ஓமை கடவுளே...', 'லாக்கப்', 'மலேசியா டூ அம்னீசியா', 'மிரள்', 'பாயும் ஒளி நீ எனக்கு', 'லவ்' போன்ற படங்களில் நடித்தவர், வாணி போஜன்.
    • 50 வயது தாண்டியும் நான் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை.

    ஓமை கடவுளே...', 'லாக்கப்', 'மலேசியா டூ அம்னீசியா', 'மிரள்', 'பாயும் ஒளி நீ எனக்கு', 'லவ்' போன்ற படங்களில் நடித்தவர், வாணி போஜன். இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

    இந்தநிலையில் சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் வாணி போஜன் பேசும்போது, "என்னிடமே சிலர், 'என்னங்க... 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கிறீங்களே...' என்றெல்லாம் கேட்கிறார்கள். இதற்கெல்லாம் தயக்கப்பட்டிருந்தால், ஒரு நடிகையாக நான் இருப்பதற்கு அர்த்தமே இல்லை.

    50 வயது தாண்டியும் நான் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. என்னை பொறுத்தவரை நடிகைகளுக்கு தயக்கம் தேவையில்லை. எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கும் துணிச்சலே தேவை. அதுதான் நம்மை பேச வைக்கும்.

    ஒரு படம் நடிப்பது என்பதே பலருக்கு பெரும் கனவு. அதேவேளை எடுத்த படத்தை ரிலீஸ் செய்வது என்பதும் கஷ்டம். நாங்களெல்லாம் நடிப்போம், சம்பாதிப்போம். அடுத்தடுத்த படங்கள் நோக்கி போய்க்கொண்டே இருப்போம். ஆனால் உயிரை கொடுத்து படத்தை எடுக்கும் இயக்குனர்கள் உண்மையிலேயே பெரியவர்கள்.

    படம் நன்றாக ஓடுமா, ஓடாதா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நடிக்கும் ஒவ்வொரு படத்தை விரும்பி, ரசித்து நடிக்கிறேன்'' என்று கூறினார்.

    வாணி போஜன் தற்பொழுது விதார்த்துடன் இணைந்து எஸ்.பி சுப்புராமன் இயக்கத்தில் அஞ்சாமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். நீட் கொடுமையையும் அதனால் மாணவர்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசக்கூடிய படமாக இது உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    Next Story
    ×