search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஆஸ்கரை கோட்டை விட்ட கங்குவா.. ஏமாற்றிய ஆடுஜீவிதம் - ரேஸில் இருந்து வெளியேறிய இந்தியப் படங்கள்!
    X

    ஆஸ்கரை கோட்டை விட்ட கங்குவா.. ஏமாற்றிய ஆடுஜீவிதம் - ரேஸில் இருந்து வெளியேறிய இந்தியப் படங்கள்!

    • இந்த வருடத்தின் விருதுகளுக்கான இறுதித் தேர்வு பட்டியலை ஆஸ்கர் குழு நேற்று வெளியிட்டுள்ளது.
    • கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

    திரைப்படங்களுக்கான வருடாந்திர ஆக்ஸர் விருது விழா மார்ச் 2 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது.

    97 வது ஆஸ்கர் விழாவான இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் இந்த வருடத்தின் விருதுகளுக்கான இறுதித் தேர்வு பட்டியலை ஆஸ்கர் குழு நேற்று வெளியிட்டுள்ளது.

    முன்னதாக இந்த வருட ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் 10 படங்கள் பரிந்துரைக்கப்பட்டன. லாப்பாட்டா லேடிஸ், ஸ்வதந்த்ரியா வீர் சாவர்க்கர், புதுல், ஆடுஜீவிதம்: தி ஆடு லைஃப், ஆல் வி இமேஜின் அஸ் லைட், பேண்ட் ஆஃப் மஹாராஜாஸ், கங்குவா, தி ஸீப்ராஸ், கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ் மற்றும் சந்தோஷ் ஆகிய படங்கள் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

    இதில் 'லாப்பாட்டா லேடிஸ்' படத்தின் மீதும் இந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவையும் இறுதிப்பட்டியலை எட்டமுடியவில்லை.

    மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ஆடுஜீவிதமும் ரேஸில் பின்வாங்கியுள்ளது. மேலும் யாரும் எதிர்பாராத வகையில் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற சூர்யாவின் கங்குவா படமும் ஆஸ்கர் குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது சூர்யா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த வருடம் ஆக்ஸர் இறுதிப் பட்டியலில் இந்தியாவிலிருந்து சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் என்ற பிரிவில் இந்தியாவைச் சார்ந்த 'அனுஜா' என்ற குறும்படம் தேர்வாகி உள்ளது.

    பிரியங்கா சோப்ரா தயாரித்த இந்த குறும்படம் மட்டுமே இந்த வருட ஆஸ்கர் ரேஸில் நிலைத்து நிற்கும் ஒரே இந்தியப் படமாகும். எனவே இதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குழந்தைத் தொழிலாளர்களின் இன்னல்களைப் பற்றி இப்படம் பேசியுள்ளது.

    இதுதவிர்த்து பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஜாக் ஆடியார்ட் இயக்கிய 'எமிலியா பெரெஸ்', சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பாடல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×