என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
கங்குவா படம் நெருப்பு மாதிரி இருக்கும்.. சின்னத்தம்பி துல்கர் - கேரளத்தில் நெகிழ்ந்த சூர்யா
- படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
- கேரள சூர்யா ரசிகர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள படம் கங்குவா. வரும் 14 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் பாபி தியோல், திஷா பதானி, மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படகிற்கு ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
புதுடெல்லி, மும்பை, ஐதராபாத் என ப்ரோமோஷன் வெய்யிடாக நடந்து வரும் நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் வைத்து நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா பங்கேற்றுள்ளார். கேரள சூர்யா ரசிகர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்காத சூர்யா, "என்ன இது? இத்தனை பேரா? என் வாழ்க்கையில் இதை மறக்கவே மாட்டேன். அன்புதான் கடவுள் என படித்திருக்கிறேன். இதுதான் அன்பு. நீங்கள்தான் கடவுள். இவ்வளவு கூட்டம் கிடைத்திருப்பதை வரமாக பார்க்கிறேன். 2.5 ஆண்டுகள் கழித்து கங்குவா வெளியாகவுள்ளது. இந்த படம் நெருப்பு மாதிரி இருக்கும் என்று தெரிந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், எனது சின்னத்தம்பி துல்கரின் லக்கி பாஸ்கர் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். யாரும் பார்க்கவில்லை என்றால் அந்த படத்தையும் பாருங்கள் என்று ரசிகர்களை கேட்டுக்கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் வாரணம் ஆயிரம் படத்தின் அஞ்சல பாடலுக்கு ரசிகர்களுடன் நடனமாடினார். துல்கர் சல்மான் நடிப்பில் அக்டோபர் 31 ஆம் தேதி லக்கி பாஸ்கர் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.