search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    உருவ கேலி செய்த கபில் ஷர்மா.. அட்லீ கொடுத்த நச் பதில்
    X

    உருவ கேலி செய்த கபில் ஷர்மா.. அட்லீ கொடுத்த நச் பதில்

    • வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இயக்குனர் அட்லீ. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என விஜயை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி திரைப்படங்களை இயக்கினார். கடந்தாண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தை இயக்கி பாலிவுட்டில் இயக்குனராக அவரது காலடி தடத்தை பதித்தார்.இத்திரைப்படம் உலகளவில் 1150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் அடுத்ததாக அட்லீ இயக்கிய தெறி திரைப்படத்தை இந்தி மொழியில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்திற் பேபி ஜான் என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    அப்படி ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியான கபில் ஷர்மா ஷோவில் படக்குழு கலந்துக் கொண்டனர். அதில் அட்லீ, வருண் தவான், கீர்த்தி சுரேஷ் , வாமிகா கலந்துக் கொண்டனர். அதில் கபில் ஷர்மா அட்லீயை பார்த்து " நீங்கள் ரொம்ப இளமையாக சிறு வயதிலேயே ஒரு மிக பெரிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக ஆகிவிட்டீர்கள். நீங்கள் ஒரு பிரபலத்தை முதல் தடவை சந்திக்கும் போது உங்களை பார்த்து எங்கே அட்லீ? என்ற கேள்வி எழுந்துள்ளதா? என அவரின் உருவத்தை கேலி செய்யும் விதமாக கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அட்லீ " நீங்கள் கேட்ட கேள்வி எனக்கு புரிந்தது.. நான் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன். நான் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்-க்கு மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தான் என்னுடைய முதல் திரைப்படத்தை தயாரித்தார். அவர் என் தோற்றத்தை பார்த்து மதிப்பிடவில்லை. நான் கதை சொல்லும் திறனைப் பார்த்து தான் என் படத்தை தயாரித்தார். இந்த உலகம் ஒருவனை அவனின் உருவத்தை வைத்து மதிப்பிட கூடாது. அவனின் மனதை வைத்து மதிப்பிட வேண்டும்" என மாஸாக பதிலளித்து அரங்கை அதிர செய்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×