என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
லண்டனில் குழந்தையை பெற்றெடுக்கும் பாலிவுட் நடிகை
- மகாராஷ்டிராவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நடிகை கத்ரீனா கைஃப் வாக்களிக்காதது பெரும் சர்ச்கையை ஏற்படுத்தியது.
- பிரிட்டன் குடியுரிமையை கத்ரீனா கைஃப் வைத்துள்ளார். இதனால் அவர் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்பட்டது.
பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப்-க்கும் நடிகர் விக்கி கவுஷலுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக நடிகை கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் பரவின. இதுகுறித்து அத்தம்பதிகள் கருத்துகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து மகாராஷ்டிராவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நடிகை கத்ரீனா கைஃப் வாக்களிக்காதது பெரும் சர்ச்கையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகை கத்ரீனா கைஃப் இங்கிலாந்து குடியுரிமை வைத்துள்ளார். கத்ரீனாவின் தந்தை முகமது கைஃப் காஷ்மீர் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் ஒரு பிரிட்டன் தொழிலதிபர். அதேபோல், அவரது தாயார் சுசான் டர்கோட் ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர் என்பதால், பிரிட்டன் குடியுரிமையை கத்ரீனா கைஃப் வைத்துள்ளார். இதனால் அவர் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில், லண்டனில் சாலையில் நடந்து செல்லும் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கவுஷலின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பது உண்மை என்பது தெளிவாகியுள்ளது.
கத்ரீனா உண்மையில் கர்ப்பமாக இருப்பதாகவும், அவரும் அவரது கணவர் நடிகர் விக்கி கவுஷலும் லண்டனில் முதல் குழந்தையை வரவேற்பதற்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.