என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
மம்மூட்டி திரைப்படத்திற்கு இசையமைக்கும் தமிழ் இசையமைப்பாளர்
- கவுதம் வாசுதேவ் மேனன் மலையாளத்தில் தயாரிக்கும் முதல் திரைப்படமாகும்.
- படத்தின் படத்தொகுப்பை ஆண்டனி மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை விஷ்ணு தேவ் கையாளுகிறார்.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் கடைசியாக வெளியான 'டர்போ' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. 'டர்போ' படத்தில் மம்மூட்டியுடன் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.
இதற்கிடையில் மம்மூட்டியை வைத்து மலையாளத்தில் புதிய படம் ஒன்றை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
கவுதம் மேனன் சொன்ன கதை பிடித்திருந்ததால் மம்மூட்டியே தனது தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி மூலம் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்த படத்தில் சமந்தா நடிக்க உள்ளதாகவும் படத்தில் மம்மூட்டி காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளார் என்றும் அடுத்தப்படுத்து திரைப்பட வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சைலண்டாக கேரள மாநிலம் கொச்சியில் வைத்து படத்தின் பூஜையே நடந்து முடிந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று முதல் படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது. படம் குறித்த அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
இதுவே கவுதம் வாசுதேவ் மேனன் மலையாளத்தில் தயாரிக்கும் முதல் திரைப்படமாகும். மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இது 6-வது திரைப்படமாகும். படத்தின் படத்தொகுப்பை ஆண்டனி மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை விஷ்ணு தேவ் கையாளுகிறார். படத்தின் இசையை தர்புகா சிவா இசையமைக்கவுள்ளார். இவர் இதற்கு முன் கவுதம் வாசுதேவ் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்திற்கு இசையமைத்தவராவார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.