என் மலர்
சினிமா செய்திகள்
பைசன் படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்து பொங்கல் வாழ்த்து தெரிவித்த மாரி செல்வராஜ்
- பைசன் படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
- இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ், பைசன் படத்தின் புதிய போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உழவர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
பைசன் ?அனைவருக்கும் எங்கள் தெக்கத்தி காளமாடனின் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ?#BISON 2025 ? @applausesocial @beemji @NeelamStudios_ @nairsameer @nivaskprasanna @Tisaditi #DhruvVikram @Netflix_INSouth @NetflixIndia pic.twitter.com/LxmYdZbqoh
— Mari Selvaraj (@mari_selvaraj) January 15, 2025