search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    போதைப்பொருள் மன்னனுடன் திருமணம்?.. 25 வருடத்திற்கு பின் நாடு திரும்பிய 90ஸ் சர்ச்சை நடிகை ஓபன் டாக்!
    X

    போதைப்பொருள் மன்னனுடன் திருமணம்?.. 25 வருடத்திற்கு பின் நாடு திரும்பிய 90ஸ் 'சர்ச்சை நடிகை' ஓபன் டாக்!

    • மாடல் அழகியாகவும் இருந்த மம்தா 2002 ஆம் ஆண்டோடு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
    • திரையுலகைச் சேர்ந்த அனைவரும் அவரைச் சந்திப்பது வழக்கம், அதனால் நானும் அவரைச் சந்திக்கச் செல்வேன்.

    80, 90 களில் ராம் லகான், வக்த் ஹமாரா ஹை, கிராந்திவீர், கரண் அர்ஜுன், சப்சே படா கிலாடி, அந்தோலன் மற்றும் பாஸி போன்ற பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்களில் நடித்த நடிகை மம்தா குல்கர்னி. மாடல் அழகியாகவும் இருந்த மம்தா 2002 ஆம் ஆண்டோடு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

    சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 1997 ஆம் ஆண்டு துபாய் நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைபட்ட விக்கி கோஸ்வாமியுடன் மம்தா உறவில் இருந்தார். மம்தா அவரை அடிக்கடி சிறைக்கு சென்று பார்ப்பதாகவும், அவர் சிறையில் இருந்தபோதே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    சிறையில் இருந்து 2012 இல் வெளியே வந்த விக்கி கோஸ்வாமியின் 2016 இல் மீண்டும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் சிக்கி கைதானார். இதில் மம்தாவுக்கும் பங்கு உள்ளதாக கூறப்பட்டது. பாலிவுட்டில் பிரபல பிரபல நடிகையாக திகழ்ந்த மம்தாவின் குல்கர்னி உடனான உறவு அதிக பரபரப்பாக இந்தி பத்திரிகைகளால் கவர் செய்யப்பட்டது.

    இந்நிலையில் 25 ஆண்டுகளாக வெளிநாடுகளையே சுற்றிய மம்தா குல்கர்னி [52 வயது] சமீபத்தில் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார். கையோடு தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கும் மம்தா குல்கர்னி மும்பையில் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.

    "நான் விக்கியை திருமணம் செய்து கொள்ளவில்லை, அவர் என் கணவர் அல்ல. நான் இன்னும் தனியாக இருக்கிறேன். நான் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    விக்கிக்கும் எனக்கும் ஒரு உறவு இருந்தது, ஆனால் நான் அதை முறித்துக்கொண்டேன். விக்கியை அந்த சமயத்தில் திரையுலகைச் சேர்ந்த அனைவரும் அவரைச் சந்திப்பது வழக்கம், அதனால் நானும் அவரைச் சந்திக்கச் செல்வேன். அவரை பற்றிய உண்மை தெரிந்ததும் அவரை விட்டுவிட்டேன்.

    2012ல் சிறையில் இருந்து விக்கி வெளியே வந்தார். 2016ல் அவரை சந்தித்தேன். ஆனால் அதன் பின் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் இப்போது என் கடந்த காலம். நான் அவரை விட்டுவிட்டேன் என்று மம்தா குல்கர்னி அந்த பேட்டியில் தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×