என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![நாக சைதன்யா - சாய் பல்லவி நடித்த தண்டேல் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் நாக சைதன்யா - சாய் பல்லவி நடித்த தண்டேல் படத்தின் முதல் நாள் வசூல் விவரம்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/08/9077751-newproject-2025-02-08t144716804.webp)
நாக சைதன்யா - சாய் பல்லவி நடித்த தண்டேல் படத்தின் முதல் நாள் வசூல் விவரம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
- படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார்
நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'லவ் ஸ்டோரி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார். அவருக்கும், சாய் பல்லவிக்குமான காதல் மற்றும் அதைச்சுற்றிய பல்வேறு விஷயங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது.
இந்நிலையில் திரைப்படத்தின் முதல் நாள் வசூலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் 21.27 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் திரைப்படம் கூடுதல் வசூலைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு