என் மலர்
சினிமா செய்திகள்
'ஜெய் பீம்' படத்துக்கு இல்லை.. ஆனால் கடத்தல்காரர் 'புஷ்பா'வுக்கு தேசிய விருது - அமைச்சர் சீதக்கா
- 'புஷ்பா 2' சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார்.
- அவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'புஷ்பா தி ரைஸ்' திரைப்படம் இந்தியா முழுவதும் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பெரும் வெற்றியடைந்தது. புஷ்பா படத்துக்காக சிறந்த நடிகர் தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கு 2023 இல் வழங்கப்பட்டது.
சிறந்த படம், சிறந்த இயக்குனர் தேசிய விருதும் புஷ்பா படம் பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் 'புஷ்பா 2 தி ரூல்' என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி வெளியானது.
இதற்கிடையே 'புஷ்பா 2' சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே விடப்பட்டார்.
மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வரும் அவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது. அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்ததுடன், அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
முதல் மந்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன், என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்தத் துறையையும், அரசியல்வாதியையும் குறைசொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். அல்லு அர்ஜுன் வீட்டின் மீது ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்களை வீசிய சம்பவமும் நிகழ்ந்தது.
எனவே அல்லு அர்ஜுன் - தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அல்லு அர்ஜுன் படங்களை மாநிலங்களில் ஓட விடமாட்டோம் என காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்,
இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை வெளிப்படுத்தி, அவர்களை ஊக்கப்படுத்திய ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் தேசிய விருது பெறவில்லை. ஆனால், ஒரு போலீஸ்கரரை நிர்வாணமாக்கிய கடத்தல்காரருக்குத் தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது என்று தெலுங்கானா அமைச்சர் சீத்தாக்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படமான ஜெய் பீம், அதிகார வர்க்கத்தால் பழங்குடியினர் படும் பாடுகளை குறித்தும், அவர்களுக்கு சட்டத்தின் மூலம் நீதி பெற்றுத்தர முடியும் என்பது குறித்தும் பேசிய படமாகும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.