என் மலர்
சினிமா செய்திகள்
இதுவரை இப்படி ஒரு அருண் விஜய யாரும் பாத்திருக்கமாட்டாங்க - வணங்கான் திரைப்படத்தை பாராட்டிய சீமான்
- பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான்.
- நடிகர் அருண் விஜய்யின் நடிப்பை பலரும் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார்.
இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் அருண் விஜய்யின் நடிப்பை பலரும் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அருண் விஜய்க்கு இப்படம் ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தை நடிகர், இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவனான சீமான் வணங்கான் திரைப்படத்தை பார்த்து படக்குழுவை பாராட்டியுள்ளார். அதில் அவர் " தற்பொழுது நிலவும் சூழ்நிலைக்கு மிக சரியான திரைப்படம். திரைப்படம் என சொல்வதோடு இதை ஒரு காவியம் என சொல்லலாம்" என கூறியுள்ளார்.
Politician #Seeman Watched #Vanangaan & Praised the Movie.pic.twitter.com/Sl4SM18E8i
— Trendswood (@Trendswoodcom) January 19, 2025
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.