என் மலர்
சினிமா செய்திகள்

Oscars 2025 - இந்தியா சார்பில் தேர்வான அனுஜா வெற்றி வாய்ப்பை இழந்தது - ரசிகர்கள் ஏமாற்றம்

- 97வது ஆக்ஸர் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ்- இல் நடைப்பெற்றது.
- Anora திரைப்படம் இந்தாண்டு 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது
97வது ஆக்ஸர் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ்- இல் நடைப்பெற்றது.
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் இந்த வருடத்தின் விருதுகளை வழங்கியது.
Anora திரைப்படம் இந்தாண்டு 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறந்த திரைப்படம் , திரைக்கதை, இயக்குனர், நடிகை மற்றும் படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் விருதை அள்ளியுள்ளது.
இந்த வருடம் ஆக்ஸர் இறுதிப் பட்டியலில் இந்தியாவிலுருந்து சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் என்ற பிரிவில் இந்தியாவைச் சார்ந்த 'அனுஜா' என்ற குறும்படம் தேர்வானது.
ஆடம் ஜே.கிரேவ்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை குனீத் மோங்கா, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர். இந்த குறும்படம் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனையை பற்றி பேசுகிறது.
அனுஜா படம் மட்டுமே இந்தியா சார்பில் இந்த வருடம் ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம்பெற்ற ஆகும் ஆனால் சிறந்த லவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை I'M NOT A ROBOT படம் வென்றது.
இதனால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்த அனுஜா திரைப்படம் விருது வெல்லாததால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.