என் மலர்
சினிமா செய்திகள்
திரும்ப திரும்ப சொல்கிறேன் ஒத்த ஓட்டு முத்தையாவை பாருங்கள்: கலகலப்பாக பேசிய கவுண்டமணி
- இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ஒத்த ஓட்டு முத்தையா.
- யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்திருகின்றனர்.
இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒத்த ஓட்டு முத்தையா. இந்த படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்திருகின்றனர்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாக்யராஜ், பி. வாசு, தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கவுண்டமணி பேசும்போது கூறியதாவது:-
என்ன பேசுறது என்று தெரியவில்லை. எல்லோரும் பேசி விட்டார்கள். நான் என்னத்த பேசுறது. எல்லோரும் ஒத்த ஓட்டு முத்தையாவை பற்றிதான் பேசியுள்ளனர். நான் அவ்வளவு பேச வேண்டியதில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளர் ரவி ராஜா படத்தை சிறந்த முறையில் தயாரித்திருக்கிறார். ஒத்த ஓட்டு முத்தையா குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். குடும்பத்துடன் பாருங்கள்.
பி. வாசுவின் 24 படத்தின் நான் நடித்திருக்கிறேன் எனக் கூறினார். 24 படங்களும் வெற்றி. அவருக்கு என்னுடைய நன்றி. பாக்யராஜ் என்னுடைய ரூம் மெட். அவரை பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. அவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் கே. ராஜன் என்னுடைய நண்பர். அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
டைரக்டர் சாய் ராஜகோபால் காமெடி எழுத்தாளர். காமெடியாக இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆரம்பம் முதல் இறுதி வரை சிரித்துக் கொண்டே இருக்கலாம். தவறாமல் படம் பாருங்கள்.
ஒத்த ஓட்டு முத்தையா படத்தை பாருங்கள்... இந்த ஒத்த ஓட்டு முத்தையாவை நன்றாக பாருங்கள்... இந்த ஒத்த ஓட்டு முத்தையாவை திரும்ப பாருங்கள்... நாம் திரும்பவும் சொல்கிறேன் ஒத்த ஒட்டு முத்தையாவை பாருங்கள். திரும்ப திரும்ப சொல்கிறேன் ஒத்த ஓட்டு முத்தையாவை பாருங்கள்... திரும்பி பார்த்து விட்டும் சொல்கிறேன், ஒத்த ஒட்டு முத்தையாவை பாருங்கள். மறந்து விடாதீர்கள்.
ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்ற வேண்டியது உங்களது கடமை. உங்களுடைய பொறுப்பு. நன்றி வணக்கம், Welcome, Thank You" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.