என் மலர்
சினிமா செய்திகள்
டிமான்ட்டி காலனி 3 திரைப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணி தொடக்கம்
- இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
திரைப்படம் இதுவரை உலகளவில் 85 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பெருமளவு மக்களின் பாராட்டுகளை பெற்றது. இரண்டாம் பாகத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்திற்கு லீட் கொடுத்து தான் முடித்திருப்பார்கள். படக்குழுவும் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்தது. இந்நிலையில் அதன் அப்டேட்டாக படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருவதாகவும்.
இப்படம் ஜப்பான் உள்பட வெளிநாடுகளில் படப்பிடிப்பு மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.