என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
சிங்கம் ஒன்று புறப்பட்டதே - வேட்டையன் படப்பிடிப்பிற்கு கிளம்பிய ரஜினிகாந்த்
- வேட்டையன் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஐதராபாத், ஆந்திரா ஆகிய இடங்களில் நடந்தன
- இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' புதிய படத்தை டைரக்டர் ஞானவேல்ராஜா இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
வேட்டையன் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஐதராபாத், ஆந்திரா ஆகிய இடங்களில் நடந்தன. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். விமான நிலையத்திற்கு காரில் வந்து இறங்கிய ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வயதானாலும் அவரின் நடை மற்றும் பேச்சு என்றும் இளமையாகவுள்ளது என அந்த வீடியோவை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர். படப்பிடிப்பு தளத்தில் ரஜினி ரசிகர்களுடனும் , மஞ்சு வாரியரின் தம்பியான மது வாரியருடன் எடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.