என் மலர்
சினிமா செய்திகள்
வெற்றி மாறன் கதையில் நடிக்கும் ரவி மோகன் - கவுதம் மேனன் கொடுத்த அப்டேட்
- கவுதம் மேனன் மலையாள திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- ரவி மோகன் நாயகனாக நடிக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன். இயக்கம் மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பு மற்றும் நடிப்பு என பலதுறைகளில் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, மம்மூட்டி நடிக்கும் மலையாள திரைப்படம் ஒன்றை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், இவர் இயக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் தமிழில் உருவாக இருக்கிறது. இந்தப் படம் தொடர்பான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதுபற்றிய தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "இயக்குநர் வெற்றி மாறன் கதை ஒன்றை திரைப்படமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை நான் இயக்க இருக்கிறேன். இந்தப் படம் தொடர்பான முதற்கட்ட ஆலோசனை மற்றும் இதர பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் ரவி மோகன் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் அதன் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.