என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![காதலர் தின பரிசை அறிவித்த ரெட்ரோ படக்குழு - ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் காதலர் தின பரிசை அறிவித்த ரெட்ரோ படக்குழு - ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/11/9195299-newproject10.webp)
காதலர் தின பரிசை அறிவித்த ரெட்ரோ படக்குழு - ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
- திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார். திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாடலின் அப்டேட்டை படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளது. படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அந்த போஸ்டரில் சூர்யா சிறை சீறுடையில் இருக்கிறார். அவர் சிறைச்சாலையில் இருக்கும் போது இப்பாடல் இடம் பெறும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இது ஒரு சோக காதல் பாடலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
A Heartfelt longing ? A Soulful song ? #KannadiPoove from #Retro ? Our early Valentine's present, dropping on 13th Feb ? #RetroFromMay1 #LoveLaughterWar@Suriya_Offl #Jyotika @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @prakashraaj @C_I_N_E_M_A_A @rajsekarpandian… pic.twitter.com/MWVKY711E0
— Stone Bench (@stonebenchers) February 11, 2025
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.