என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மீனாட்சி சௌத்ரியுடன் சாய் அபயங்கர்.. 3-வது Independent ஆல்பம் சித்திர புத்திரி வெளியீடு
    X

    மீனாட்சி சௌத்ரியுடன் சாய் அபயங்கர்.. 3-வது Independent ஆல்பம் 'சித்திர புத்திரி' வெளியீடு

    • சாய் அபயங்கர் கடந்தாண்டு 'கட்சி சேர' 'ஆசை கூட' என்ற 2 பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டார்.
    • சூர்யா 45 படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

    பிரபல சினிமா பாடர்களான திப்பு மற்றும் ஹரினி தம்பதியின் மகனான சாய் அபயங்கர் கடந்தாண்டு தொடக்கத்தில் 'கட்சி சேர' என்ற பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டார். இந்த பாடல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது.

    அதைத்தொடர்ந்து சாய் அபயங்கர் 'ஆசை கூட' என்ற பாடலை வெளியிட்டார். இந்தப் பாடலும் இணையத்தில் மிகப் பெரிய வைரல் ஆனது.

    இந்த இளம் வயதிலேயே அவர் இசையமைத்த இரு பாடல்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இதனால் சூர்யா 45 படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரை தேடி வந்தது.

    இந்நிலையில், கட்சி சேரா, ஆசை கூட வரிசையில் சாய் அபயங்கரின் 3 ஆவது இண்டிபெண்டண்ட் பாடலான 'சித்திரபுத்திரி' பாடலை நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த ஆல்பத்தில் பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி நடனமாடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    Next Story
    ×