என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![அட்லியின் அடுத்த படத்தில் இணையும் சாய் அபயங்கர்? அட்லியின் அடுத்த படத்தில் இணையும் சாய் அபயங்கர்?](https://media.maalaimalar.com/h-upload/2025/02/10/9151814-asa.webp)
அட்லியின் அடுத்த படத்தில் இணையும் சாய் அபயங்கர்?
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் மாபெரும் வசூலை குவித்தது.
- சூர்யா 45 படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
தமிழில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இவர் கடைசியாக இயக்கிய 'ஜவான்' திரைப்படம் உலகளவில் ரூ. 1,100 கோடியை கடந்து அசத்தியது. இந்த நிலையில், இயக்குநர் அட்லி அடுத்து இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இயக்குநர் அட்லி மற்றும் அல்லு அர்ஜூன் இணையும் புதிய படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில், அட்லி மற்றும் அல்லு அர்ஜூன் இணையும் படத்தில் இளம் இசையமைப்பாளர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்டிபென்டென்ட் பாடல்களுக்கு இசையமைத்து பிரபலமான சாய் அபயங்கர் அட்லி இயக்கும் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் நடிகர் சூர்யா இணையும் புதிய படத்திற்கு இசையமைக்கிறார்.
முன்னதாக இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க இருந்த நிலையில், சாய் அபயங்கர் இசையமைப்பார் என்று படக்குழு அறிவித்தது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.