search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    selvaragavan - tamil
    X

    தமிழ்ல பேசுறத அவமானமாக பார்த்தா அப்படிப்பட்ட ஃபிகரே தேவையில்லை - செல்வராகவன்

    • தமிழ் மொழியில் அனைவரும் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தி வீடியோ ஒன்றை செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.
    • வெளிநாட்டுக்காரங்க தமிழ் கத்துக்கிட்டு தமிழ்ல பேசுறத பெருமையா நினைக்கிறாங்க..உலகத்துலேயே பழமையான மொழியும் தமிழ்தான்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான செல்வராகவன், தற்போது பல படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

    செல்வராகவன் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மக்களுக்கு தேவையான கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். அவ்வகையில் தமிழ் மொழியில் அனைவரும் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "தமிழ்நாட்டு மக்களை நான் கெஞ்சிக் கேட்கிறேன். தமிழ் இனி மெல்லச் சாகும்ன்னு பாரதியார் சொன்னாரு. அது எந்த அளவுக்கு உண்மைன்னா தமிழ் இப்போது ஐசியு-வுல வெண்டிலேட்டர்ல இருக்கு. தமிழ்ல பேசுறத அவமானமா அருவருப்பா நினைக்குறாங்க.

    எனக்கு இங்கீலீஷ்ல பேசுறதோட அவசியம் புரியுது. ஸ்கூல்ல காலேஜ்ல இங்கீலீஷ்ல பேசமுடியாம அவமானப்பட்டு எவ்ளோ தடவை அழுதுருக்கேன். கூனி குறுகிறுக்கேன். புல் கிளாஸே இங்கீலீஷ்ல தான் பேசும். இங்கிலீஷ் தெரிஞ்ச பசங்க தான் கையை காட்டி பேசுவாங்க.

    இங்கிலீஷே தெரியாம எப்படியோ கடைசி பென்ச்சுல இருந்து படிச்சு வெளியே வந்துட்டோம். அதுக்குப் பிறகு தான் ஒரு வெறி வந்துச்சு.. என்ன இங்கீலீஷ் தானா? இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், இங்கீலிஷ் புத்தகங்கள் எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன். அர்த்தம் தெரியாததற்கு பக்கத்துலயே டிக்ஸ்னைரி வச்சுக்கிட்டு இதுக்கு இதான் அர்த்தம் என தெரிஞ்சுகிட்டேன்.

    கொஞ்சம் கஷ்டமான பிராசஸ்தான். ஆனா படிக்கப் படிக்க கொஞ்சம் சரளமா பேச ஆரம்பிச்சு, ஸ்டேஜ்ல பேச ஆரம்பிச்சு அதுக்கப்புறம் சினிமாவுக்கு வந்த பின்னாடி தான் ஓரளவுக்கு நல்லா பேச ஆரம்பிச்சேன்.

    எங்க போனாலும் தமிழ்ல தான் பேசுவேன். நீங்களும் எங்க போனாலும் தமிழ்-லேயே பேசுங்க. தலைநிமிர்ந்து பேசுங்க. அவங்க உங்கள அவமானமா பார்த்தா முறைச்சுப் பாருங்க.

    தமிழ்ல பேசுவதை ஃபிகர் அவமானமாக பார்த்தால் அப்படிப்பட்ட ஃபிகரே தேவையில்லை விடுங்க. தமிழ்ல பேசுற தமிழ்நாட்டுப் பொண்ணே போதும். உலகத்துல எந்த நாட்டுக்கு வேணும்னாலும் போய் பாருங்க. அவங்க அவங்க தாய் மொழியிலதான் பேசுவாங்க.

    இங்கிலிஷ்ல சப்-டைட்டில்தான் போடுவாங்க. வெளிநாட்டுக்காரங்க தமிழ் கத்துக்கிட்டு தமிழ்ல பேசுறத பெருமையா நினைக்கிறாங்க..உலகத்துலேயே பழமையான மொழியும் தமிழ்தான். உங்களை கெஞ்சி கேட்டுக்கிறேன். காலம் காலமா மனசுக்குள்ள இருந்ததை உங்ககிட்ட ஷேர் பண்ணிக்றேன்" என்று பேசியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×