search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    IND Vs ENG  டி20 போட்டி டிக்கெட்டுகளை ஸ்விக்கி டெலிவரி ஊழியர் திருடியதாக நடிகை குற்றசாட்டு
    X

    IND Vs ENG டி20 போட்டி டிக்கெட்டுகளை ஸ்விக்கி டெலிவரி ஊழியர் திருடியதாக நடிகை குற்றசாட்டு

    • டி20 போட்டிக்கான டிக்கெட்டுகளை டெலிவரி செய்யாமல் ஸ்விக்கி ஊழியர் தப்பி ஓடிவிட்டார்.
    • இது தொடர்பாக ஸ்விக்கியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

    இப்போட்டியை காண தனது மேனேஜர் வாங்கிய 2 டிக்கெட்டுகளை ஸ்விக்கி ஜெனி டெலிவரி ஊழியர் திருடியதாக நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி புகார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவரது மேனேஜர் பதிவிட்ட பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்வஸ்திகா முகர்ஜி பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "இன்று எங்களுக்கு இது நடந்தது, நாளை உங்களுக்கும் நடக்கலாம். ஈடன் கார்டனில் நடந்த இந்தியா-இங்கிலாந்து போட்டிக்கான 2 டிக்கெட்டுகளை நேற்று ஸ்விக்கி ஜெனி டெலிவரி ஊழியர் திருடி சென்று விட்டார்.

    கான்பூரில் இருந்து இந்த டி20 கிரிக்கெட் போட்டியைக் காண வந்த எனது நண்பரின் தந்தைக்கு இந்த 2 டிக்கெட்டுகளை ஸ்விக்கி ஜெனி டெலிவரி ஊழியரிடம் கொடுத்து அனுப்பி வைத்தோம். ஆனால் அவர் டிக்கெட்டுகளை டெலிவரி செய்யாமல் தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக ஸ்விக்கியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த விஷயத்தில் காவல்துறையினரால் கூட உதவ முடியாததால், டிக்கெட்டுகளை மீட்பதற்கான நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன். அந்த திருடனைப் பற்றிய அனைத்து விவரங்களும் ஸ்விக்கியில் இருந்தும் அவர்கள் மௌனம் காப்பது என்னை மிகவும் விரக்தியடையச் செய்தது. இது போன்ற சம்பவங்கள் நடந்தால் யார் தான் ஸ்விக்கியை நம்புவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி பொருட்களை டெலிவரி செய்யும் விதமாக ஸ்விக்கி ஜெனி என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    Next Story
    ×