search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல் -நடிகர் கமல்ஹாசன்
    X

    கமல்ஹாசன்

    சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல் -நடிகர் கமல்ஹாசன்

    • நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் -2 படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    25 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


    கமல்ஹாசன்

    லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் கமல் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அதில், "சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    Next Story
    ×