search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பல புறக்கணிப்புகளுக்கு பிறகு அருண் விஜய் எழுந்திருக்கிறார் - நடிகர் பிரசன்னா
    X

    பிரசன்னா

    பல புறக்கணிப்புகளுக்கு பிறகு அருண் விஜய் எழுந்திருக்கிறார் - நடிகர் பிரசன்னா

    • ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்திருக்கிறார். இந்த படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சினம்

    இந்நிலையில் சினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரைத்துறையினர், படக்குழு என பலரும் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் பிரசன்னா கூறியதாவது, "பல புறக்கணிப்புகளுக்கு அப்புறம் அருண் விஜய் எழுந்து வந்து இருக்கிறார். அவருக்கு ஏற்ற வார்த்தை தான் படத்தின் தலைப்பாக அமைந்து இருக்கிறது. எங்களுக்கு அருண் விஜய் உதாரணமாக இருக்கிறார்.

    பிரசன்னா

    அவர் எனது குடும்ப நண்பர். இயக்குனர் குமார் உடைய திறமை எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தும் ஒன்று. காளி வெங்கட் சிறந்த குணசித்திர நடிகர். இசையமைப்பு படத்தின் கதையமைப்புடன் சேர்ந்து அமைந்து இருக்கிறது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள் என்றார்.

    அருண் விஜய் - ஜி.என்.ஆர்.குமாரவேலன்

    இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் கூறியதாவது, "என்னுடைய படத்திற்கு பாராட்டுகளையும், நான் செய்த தவறுகளுக்கு விமர்சனங்களும் தொடர்ந்து கொடுத்து வரும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தின் கதையாசிரியர் உண்மையாகவே காவல் துறையில் பணிபுரிகிறார். இந்த படத்தின் கதையை கேட்டு, என்னுடைய முந்தைய படங்கள் பற்றி யோசிக்காமல் அருண் விஜய் ஓகே செய்தார். விஜய்குமார் சார் உடன் பணிபுரிவது எனக்கு முதலில் பயத்தை கொடுத்தது. அதன்பிறகு மகிழ்ச்சியாக இருந்தது.

    சினம்

    நடிகரே இந்த படத்தின் தயாரிப்பாளராக அமைந்தது பெரிய பலமாக அமைந்தது. கோவிட் காலத்தில் நம்பிக்கை இழக்க கூடிய தருணத்தில், எங்களுக்கு நம்பிக்கை அளித்தவர் விஜயகுமார் சார். இந்த படத்தை ஒடிடியில் வெளியிடாமல், தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று அருண் விஜய் உறுதியாக இருந்தார். இந்த படம் கண்டிப்பாக பேசப்பட கூடிய படமாக இருக்கும்" என்றார்.

    Next Story
    ×