என் மலர்
சினிமா செய்திகள்
இளம் கிரிக்கெட் வீரருடன் ராஷ்மிகா காதல்?
- தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் ராஷ்மிகா.
- இவர் நடித்த புஷ்பா திரைப்படம் சினிமா பயணித்தில் ராஷ்மிகாவுக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடித்த புஷ்பா படம் ராஷ்மிகாவின் சினிமா பயணித்தில் திருப்புமுனையாக அமைந்தது. இந்தி மொழி படங்களிலும் நடிக்கிறார்.
ஏற்கனவே கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை ராஷ்மிகா காதலித்தார். 2017-ல் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் அடுத்த வருடமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணத்தை ரத்து செய்து பிரிந்தனர். பின்னர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைத்து பேசப்பட்டார். இருவரும் மாலத்தீவுக்கு ஜோடியாக சென்று வந்ததாகவும் கிசுகிசுக்கள் வந்தன. இதனை இருவரும் மறுத்தார்கள்.
இந்நிலையில் 23 வயது இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மீது 26 வயது ராஷ்மிகாவுக்கு காதல் ஏற்பட்டு உள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஷ்மிகாவிடம் சுப்மன் கில் மீது உங்களுக்கு ஈர்ப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆமாம் என்று கண்ணடித்தபடி சிரித்தார். இதையடுத்து இருவரும் காதலிப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. சுப்மனும் ஏற்கனவே ராஷ்மிகா மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.