என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![தாமதமாகும் சமந்தா திரைப்படம்.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் தாமதமாகும் சமந்தா திரைப்படம்.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்](https://media.maalaimalar.com/h-upload/2022/08/03/1740594-sam.jpg)
X
சமந்தா
தாமதமாகும் சமந்தா திரைப்படம்.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
By
மாலை மலர்3 Aug 2022 6:14 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.
- இவர் தற்போது நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் தாமதத்திற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா தொடர்ந்து நடித்து வரும் படங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக முடிந்து வருகிறது. ஆனால் குணசேகர் இயக்கத்தில் அவர் நடித்து வரும் சாகுந்தலம் படத்தின் பணிகள் முடிந்து விட்ட பிறகும் அடுத்தக்கட்ட தகவல் இல்லாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருப்பதாக தகவல் வருகிறது.
சாகுந்தலம்
இது தொடர்பாக இயக்குனர் குணசேகர் கூறியதாவது, இந்த படம் புராண இதிகாசமாக இருப்பதால் படத்தில் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருக்கிறது. இதற்கான பணிகளால் தான் தாமதம் ஆகிறது என்று கூறியிருக்கிறார். சாகுந்தலம் படத்தை சமந்தா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருப்பதால் விரைவில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
Next Story
×
X