என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
நஷ்ட ஈடு வழங்கும் முன்னாள் மனைவி.. வியக்க வைத்த ஜானி டெப் செயல்
- அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் ஹெர்ட் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்தது.
- இதையடுத்து, ஜானி டெப் உடனான அனைத்து வழக்குகளையும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை நஷ்ட ஈடாக வழங்கி முடித்துக் கொள்ளவுள்ளதாக ஆம்பர் ஹெர்ட் அறிவித்திருந்தார்.
'பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்' திரைப்பட தொடர் மூலம் உலக அளவில் பிரபலமான நடிகர் ஜானி டெப். இவர் திருமண வாழ்க்கையின் போது தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் வழக்குத்தொடர்ந்தார். இதை எதிர்த்து தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஆம்பர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஜானி டெப் பதில் மனு தாக்கல் செய்தார்.
ஆம்பர் ஹெர்ட் - ஜானி டெப்
இந்த வழக்குகளில் ஜானி டெப் நிரபராதி எனவும், ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதாரமற்றவை என கூறி கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது. மேலும், அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் ஹெர்ட் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாயும் (10 மில்லியன்), அபராதமாக 38 கோடி ரூபாயும் ( 5 மில்லியன்) என மொத்தம் 116 கோடி ரூபாய் (15 மில்லியன்) வழங்க வேண்டும் என கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு உலக அளவில் பேசுபொருளானது.
ஆம்பர் ஹெர்ட் - ஜானி டெப்
இதையடுத்து, ஜானி டெப் உடனான அனைத்து வழக்குகளையும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை நஷ்ட ஈடாக வழங்கி முடித்துக் கொள்ளவுள்ளதாக ஆம்பர் ஹெர்ட் அறிவித்திருந்தார். இந்நிலையில், ஆம்பர் ஹெர்ட் வழங்கவுள்ள ஒரு மில்லியன் டாலரை நடிகர் ஜானி டெப், 'மேக் ஏ பிலிம் பவுண்டேஷன்', 'தி பெயிண்டட் டர்ட்டில்','ரெட் பெதர்', 'டெடியரோ சோசைட்டி' மற்றும் 'அமசோனியா பண்ட் அலயன்ஸ்' போன்ற ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.