search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    என்னது காப்பியா..? சர்ச்சையில் சிக்கிய அனிருத்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
    X

    என்னது காப்பியா..? சர்ச்சையில் சிக்கிய அனிருத்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

    • பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
    • சமீபத்தில் அனிருத் இசையில் ரஜினியின் 'ஜெயிலர்’, விஜய்யின் ’லியோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.

    2012-ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பின் வெளியான எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலை இல்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.


    சமீபத்தில் அனிருத் இசையில் ரஜினியின் 'ஜெயிலர்', விஜய்யின் 'லியோ' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில், 'லியோ' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆர்டினரி பர்சன்' என்ற பாடலை ஐரோப்பாவின் பெலரஸ் நாட்டை சேர்ந்த இசைக்கலைஞர் ஒட்னிகாவின் "வேர் ஆர் யூ'' பாடல் ஆல்பத்தில் இருந்து அனிருத் காப்பி அடித்து இருப்பதாக நெட்டிசன்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.



    ஒட்னிகா-அனிருத்

    இது குறித்து ஒட்னிகாவுக்கும் தகவல்கள் அனுப்பினர். இதை பார்த்த அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "லியோ படத்தின் பாடல் குறித்து எனது மெயில், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் கமெண்ட் செய்துவருவதை பார்த்தேன். அதற்கு நன்றி. இந்த சர்ச்சை குறித்து எனக்கு தெளிவாக எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரிப்பதற்கு நேரம் கொடுங்கள்'' என்று கூறியுள்ளார். இது தற்போது பரபரப்பாகியுள்ளது.


    Next Story
    ×