search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அருள் நிதி பிறந்தநாள் விழாவை கொண்டாடிய ரெட் ஜெயண்ட் மூவீஸ்
    X

    அருள் நிதி

    அருள் நிதி பிறந்தநாள் விழாவை கொண்டாடிய ரெட் ஜெயண்ட் மூவீஸ்

    • இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் தேஜாவு.
    • இந்த படம் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி, நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இந்த படத்தில் ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மிஸ்டரி திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் அருள்நிதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார்.


    அருள் நிதி

    இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் தேஜாவு திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நாளை (22-07-2022) திரையரங்குகளில் வெளியாகிறது.

    இந்நிலையில் நடிகர் அருள் நிதியின் பிறந்தநாள் விழா இன்று ரெட் ஜெயண்ட் மூவீஸ் அலுவலகத்தில் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் லைகா புரொடக்‌ஷன்ஸ் சி.இ.ஓ. தமிழ்குமரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் அலுவலகத்தினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×