என் மலர்
சினிமா செய்திகள்
டாஸ்மாக்கை மூட சொன்ன பாலாஜி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
- பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ்.
- இவரின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.
பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பாலாஜி முருகதாஸ். இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் பட்டத்தை வென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் பாலாஜி முருகதாஸுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை.
பாலாஜி முருகதாஸ்
இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்து பகிர்ந்துள்ள பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், 'தயவுசெய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். இது ஏராளமான உயிர்களை அழித்துள்ளது. ரம்மியை ஒப்பிடும்போது குடியால் அழிந்தவர்கள் தான் அதிகம் என்று பதிவு செய்திருந்தார்.
ரசிகர்கள் பகிர்ந்த புகைப்படம்
மேலும், தனது மற்றொரு பதிவில், மதுவினால் என்னை போன்ற பலர் அனாதையாக மாறியுள்ளனர். பலர் குடும்பத்தை இழந்துள்ளனர். என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள். உங்களால் என்னை சமாளிக்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பாலாஜி முருகதாஸ் டாஸ்மாக் கடைக்குள் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.