என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![அடுத்து களமிறங்கும் தனுஷ் பட பாடல் அடுத்து களமிறங்கும் தனுஷ் பட பாடல்](https://media.maalaimalar.com/h-upload/2022/07/30/1738191-dan.jpg)
தனுஷ்
அடுத்து களமிறங்கும் தனுஷ் பட பாடல்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.
- 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர். இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
திருச்சிற்றம்பலம்
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள நான்காவது பாடலான 'தேன்மொழி' என்ற பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். இந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று தனுஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#Thiruchitrambalam 4th single #Thenmozhi from Today 🤩@dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @silvastunt @omdop @editor_prasanna @jacki_art @theSreyas pic.twitter.com/qEpqEAGXuX
— Sun Pictures (@sunpictures) July 30, 2022