என் மலர்
சினிமா செய்திகள்
X
ஆந்திர முதலமைச்சரான ஜீவா.. எப்படி தெரியுமா?
Byமாலை மலர்7 Oct 2023 1:24 PM IST (Updated: 7 Oct 2023 2:08 PM IST)
- 'யாத்ரா'படத்தை இயக்குனர் மஹி வி ராகவ் இயக்கியிருந்தார்.
- இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் 'யாத்ரா'. இந்த படத்தை இயக்குனர் மஹி வி ராகவ் இயக்கியிருந்தார். இதில், ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார்.
யாத்ரா -2 போஸ்டர்
இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் ஆந்திர முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆரின் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணம் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'யாத்ரா -2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் போஸ்டர் 9-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
Next Story
×
X